என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்வில் தோல்வி"
கோவை:
பொள்ளாச்சி பொங்காளியூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் அருண்குமார் (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அருண்குமார் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருண்குமார் விஷத்தை குடித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அருண்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்யாறு:
செய்யாறு டவுன் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், அரசு பஸ் கண்டக்டர். இவரது மகன் அஸ்வின்குமார் (20). பூந்தமல்லி அருகே உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த தேர்வில் சரியாக எழுதவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை தற்கொலை செய்ய முயற்சி செய்தார். ஒரு பாட்டிலில் பெட்ரோல் எடுத்து கொண்டு செய்யாறு அண்ணா கலைக்கல்லூரி மைதானத்துக்கு சென்றார். அங்கு வைத்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். மைதானத்தில் வாக்கிங் சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து திடுக்கிட்டனர். அஸ்வின்குமார் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
அவரை செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
செய்யாறு டவுன் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அசாரூதீன் (வயது 19). இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் நடந்த தேர்வில் அசாரூதீன் தோல்வி அடைந்தார். இதனால் மிகுந்த மனவேதனையுடன் அசாரூதீன் இருந்து வந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் மன உளைச்சலுடன் சோகத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி கல்லூரி விடுதியில் இருந்த அசாரூதீன், எலி மருந்தை தின்று விட்டார். இதனால் உயிருக்கு போராடிய அவரை சக நண்பர்கள் மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அசாரூதீன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்